Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email: news@importmirror.com impordnewss@gmail.com 0776144461 - call: 0724400033 Admin-message
Headlines Admin-message
image gate 5 நிமிடத்தில்

பிரதான செய்திகள்

குறைந்த கட்டணத்தில் இணையத்தள வடிவமைப்புக்கு

குறைந்த கட்டணத்தில் இணையத்தள வடிவமைப்புக்கு

விஷேட அரசியல் களம்

HOT NEWS > >

      விஷேட அரசியல்;-02

      "விமர்சனங்களை எப்படி கையாள்வது., பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்.

      Written By ADMIN on Sunday, June 12, 2016 | 5:18:00 AM




      ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


      சமூக அரசியல் உழைப்பில் ஈடுபடும் போது 'விமர்சனங்கள்' தவிர்க்கமுடியாதவை.

      தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களே சூடானவிமர்சனக் களமாக மாறிவருகின்றன.
      அந்த வகையில், விமர்சனங்களை கையாளும்போது நமதுசகோதரர்கள் கவனிக்க வேண்டிய சில குறிப்புகளையும்ஆலோசனைகளும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

      1. தவறை ஏற்றுக் கொள்ளும் மனோநிலை எம்மிடம் அடிப்படையில்இருக்க வேண்டும். எம்மைப்பற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்களில்நியாயமிருப்பின் அதனை ஏற்றுக் கொள்ளும் முதல் நபர்களாக நாம்இருக்க வேண்டும். அதை விடுத்து எல்லா விமர்சனங்களையும்முறியடிக்க நாம் முயற்சிக்கக் கூடாது. எமக்கெதிரானபொய்களுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல்போன்றே எம்மைப்பற்றிய குறைகளையும் எமது தவறுகளையும்ஏற்றுக் கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நமது சொந்தத்தவறை ஏற்றுக் கொள்ளும் மனோ நிலை கொண்ட மனிதர்களால்தான்சமூக உழைப்பில் நேர்மையான பாதையில் முன்னேறுவதும் சிறந்தமாற்றங்களை உருவாக்குவதும் சாத்தியமாகும்.

      2. விமர்சனங்கள் பலவகைப் படுகின்றன. ஆக்கபூர்வமானவிமர்சனங்கள் (Constructive Criticism), அடிப்படை நோக்கத்தைப் புரிந்துகொண்ட விமர்சனங்கள் (Objective Criticism), நடுநிலையான திறந்தமனதுடனான விமர்சனங்கள் (Open Minded or neutral Criticism),அப்பாவித்தனமான அல்லது பிழையான புரிதலின் அடிப்படையிலானவிமர்சனங்கள் (Innocent or Ill-informed Criticism), பிழையான மனப்பதிவின்காரணமாக ஏற்பட்டும் விமர்சனங்கள் ( prejudiced or subjective Criticism),அதே போன்று பகைமையை வெளிப்படுத்தும் விமர்சனங்கள் ( Hostile Criticism) என பல வகையாக அவை அமையலாம்.
      அந்த வகையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களின் தரம் பற்றியமதிப்பீடு நம்மிடம் தெளிவாக இருக்க வேண்டும். எமக்கெதிராகசொல்லப்படும் எல்லாவகை விமர்சனங்களுக்கும் நாம் பதில் கருத்துசொல்ல வேண்டிய அவசியமில்லை. பல சந்தர்ப்பங்களில் மௌனமேசிறந்த பதில் என்பதை மறந்து விடக்கூடாது.

      3. விமர்சனத்திற்குட்படுத்தபடுகின்ற ஒரு விடயம் ஒருவரின்தனிப்பட்ட விவகாரமா அல்லது சமூக நலன்சார்ந்த விடயமாஎன்பதனை எப்படி வரையறை செய்வது என்ற தெளிவீனம்பரவலாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக தனிநபர்விவகாரங்களை குறிவைத்து தாக்குவதாக பலசந்தர்பங்களில்விமர்சனங்கள் அமைந்து விடுகின்றன. 'ஒருவரின் விமர்சனத்திற்குரியநடவடிக்கையானது சமூக நலன்களை பாதிக்காத வரை அது சமூகநலன் சார்ந்த விடயமாகாது' என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவிதியாகும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
      எமக் கெதிரான விமர்சனங்கள் பல நமது தனிப்பட்ட வாழ்க்கையைகுறிவைப்பதாக அமைந்தாலும்கூட அவற்றிற்கு நாம் பதிலளிக்கும்போது அதே வழிமுறையை கையாளவே கூடாது.

      4. விமர்சனங்களுக்கான எமது பதில் கருத்துக்களை எழுதும் போதுஇரண்டு வகையான கேட்போர் ( audience ) நம்முன்னே உள்ளனர்என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
      முதலாவதாக, அந்தக் கருத்தை எழுதியவர். அடுத்ததாகஅந்தக்கருத்தை உண்மையென நம்பி விடக்கூடிய ஏனையோர்.முதலாமவர் வேண்டுமென்றே அநியாயமான ஒரு விமர்சனத்தைசொன்னாலும்கூட அதனைப் பொறுமையுடனும் நிதானத்துடனும்கையாள வேண்டும். இங்கு எமது பிரதான நோக்கம் அநியாயமானவிமர்சனத்தை முன்வைப்பவருக்கு தெளிவுபடுத்துவதை விடவும்,அவரது தவறான கருத்தை நியாயமென நம்பும் ஏனையோர்களுக்குதெளிவுபடுத்துவதே என்பதை மறந்து விடக்கூடாது.

      5. இவ்வாறு எமது கருத்தை அடுத்தவர்களிடம் தெளிவு படுத்தவேண்டும் என்றால் முதலில் அவர்களது உள்ளத்தையும்மனச்சாட்சியையும் தொடுவதாக நமது கருத்துக்கள் இருக்க வேண்டும்.அதற்கு நமது எழுத்துக்களில் ஒரு தன்னடக்கமும் பணிவும்சகோதரத்துவ வாஞ்சையும் நாகரீகமும் இருக்க வேண்டும்.

      6. எமது பதில் கருத்துக்களால் எமக்கெதிரான நிலைப்பாட்டைக்கொண்டோரை எமது நியாயத்தின் பக்கம் கொண்டு வரமுடியாவிட்டாலும் அவர்களை ஒரு நடுநிலை (neutral ) மனோநிலைக்குகொண்டு வர முயற்சிக்க வேண்டும். எனவே , எமது பதில் கருத்துக்கள்முரண்பாடுகளையும் பகைமையினையும் வளர்ப்பதாக கண்டிப்பாகஇருக்கக்கூடாது.

      7. எமது பதில் கருத்துக்கள் ஆதார பூர்வமாகவும், உண்மையானதகவல்கள் அடிப்படையிலும் முடியுமானால் ஆவணங்கள் மூலமானஆதாரங்களோடும் இருப்பதோடு, அவற்றை புரிந்து கொள்ளத்தக்கஉதாரணங்களோடும் எளிமையான முறையில் தர்க்க ரீதியாகவும்முன்வைக்க வேண்டும். இவை எதுவுமற்ற வெற்றுக் கருத்துகளாகவோஅல்லது கிண்டல், கேலிகளாகவோ எமது கருத்துக்கள் ஒரு போதும்அமையக் கூடாது.

      8. சமூக அரசியல் மாற்றமொன்றிற்காக ஊடக ரீதியாக நாம் மேற்கொள்ளும் உழைப்பு ஒரு வகை போராட்டமேயாகும். இதற்கென்று ஒருதர்மம் இருக்கிறது. அந்த தர்மத்தின் பிரகாரம் எமது சுய விருப்புவெறுப்புகளுக்கு இங்கு இடமேயில்லை என்பதனையும் மறந்துவிடக்கூடாது.

      9. ஒருவர் மீது அல்லது ஒரு அமைப்பு மீது நாம் கொண்டுள்ள அன்பும்பற்றும் அவர்/அதன் மீதான நியாயமான விமர்சனங்களை மறுக்கச்செய்து விடக்கூடாது. அதேபோன்று, இன்னொருவர் மீதுள்ளவெறுப்பானது அவர் சொல்லும் நியாயமான விமர்சனங்களைஏற்பதற்கு தடையாகவும் அமைந்து விடக்கூடாது.

      10. கடைசியாக, நாம் மேற்கொண்டு வரும் சமூக அரசியல்மாற்றத்திற்கான உழைப்பு இறைவனின் பொருத்தத்தையும்கூலியையும் நாடியது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த வகையில்எம்மை நோக்கி சொல்லப்படும் வசைகளும் அபாண்டங்களும் கூடநமக்கு நன்மையைப் பெற்றுத் தரும் விடயங்களே என்பதனை மனதிற்கொள்ள வேண்டும்.